Home உலகம் கனடாவில் அபாயகரமான பக்டீரியா ஒன்று குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் அபாயகரமான பக்டீரியா ஒன்று குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

கனடாவில் (Canada) இறக்குமதி செய்யப்படும் எனோகி காளான் (Enoki mushrooms) எனப்படும் காளான் வகையில் லிஸ்டீரியா என்ற அபாயகரமான பக்டீரியா இருப்பதாக கனடாவின் சுகாதார துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட காளான்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இந்த காளான் வகைகள் ஆசிய உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்துவதாக இருந்தாலும், சில சமயங்களில் அவை பச்சையாக உண்ணப்படுவதால், நோய்கள் பரவுவதற்கான அபாயம் ஏற்படுகின்றது.

எனோகி காளான் வகை தென் கொரியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இந்த பக்டீரியாவால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version