Home உலகம் இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

0

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை உயிருடன் எடுத்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் காசாவின் ரபா நகரில் நேற்று(21) இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

கனடா கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர்

உயிரிழந்த கர்ப்பிணி

இதில் 22 பேர் உயிரிழந்ததுடன் பலியானவர்களில் கர்ப்பிணி ஒருவர் அவரது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர்.

உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல் சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்துள்ளார்.

அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து வைத்தியர்கள்  உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிசி இறக்குமதிக்கு மீண்டும் தடை: பாகிஸ்தானை எச்சரிக்கும் ரஷ்யா

உடல்நிலை முன்னேற்றம்

குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல் சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.4 கிலோ எடையுள்ள குழந்தை அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சகானியின் மகள் மலக் தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பி உள்ளதாக அவரது உறவினர் ரமி அல் ஷேக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version