Home உலகம் 650 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ள பிரித்தானியா: ரஷ்யவிற்கு பேரிடி

650 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ள பிரித்தானியா: ரஷ்யவிற்கு பேரிடி

0

ரஷ்ய – உக்ரைன் போரில் உக்ரைனுக்கான (Ukraine) ஆதரவை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு பிரித்தானியா (UK) 650 ஏவுகணைகள் கொண்ட ஒரு தொகுப்பை அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, பிரித்தானிய உள்துறை செயலாளர் ஜான் ஹீலி (John Healey), ஜேர்மனியில் (German) நடைபெறவுள்ள உச்சிமாநாடு ஒன்றில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய அரசின் ஆதரவு

இந்த நிலையில், உக்ரைனுக்கு பிரித்தானியாவால் இந்த உதவியானது, உக்ரைனின் விமானப்படைக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, பிரதமர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) நாட்டிற்கு புதிய பிரித்தானிய அரசின் ஆதரவை உறுதிப்படுத்தும் என்றும் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உக்ரைனின் மக்கள், உட்கட்டமைப்பு மற்றும் நிலங்களை ரஷ்ய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க, பிரித்தானியா தாயரித்த இந்த ஏவுகணைகள் உதவும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு

மேலும், உக்ரைனின் பாதுகாப்புகளை மேம்படுத்தவும், ஐரோப்பியாவின் பாதுகாப்புக்கு உக்ரைனின் முக்கியத்துவத்தை வலியுறுத்த குறித்த பங்களிப்பு உதவியாக இருக்கும் என்றும் பிரித்தானிய உள்துறை செயலாளர் குறிப்பட்டுள்ளார்.

இதன் படி, உக்ரைன் பாதுகாப்பு தொடர்பு குழு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் நகரில் அமெரிக்க விமானப்படை தளத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version