தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்திய பிரதமர் மோடிக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
நீண்ட நாட்களாக இடம்பெற்றுவருட் இலங்கை இந்திய கடற்றோழிலாளர்கள் பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவர உடனடியாக கச்சத்தீவை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது.
சமத்துவ அரசியல்
இதன்போதே குறித்த கோரிக்கையை விஜய் முக்வைத்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எல்லாருக்கும் எல்லாமும் என்ற அரசியலை 1967இல் அண்ணா அறிமுகப்படுத்தினார்.
இந்த கொள்கையால் வந்த சமத்துவ அரசியலே திராவிடம். அதன்படி அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின் முற்றிலும் விலகிவிட்டார்.
எம்ஜிஆர் உருவாக்கிய கொள்கை, அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து தடம் மாறி பா.ஜ.கவுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழகத்தில் பா.ஜ.க பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை அடைவதற்கு அ.தி.மு.கவின் இன்றைய தலைமை எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறது.
அண்ணாவின் கொள்கை
அண்ணாவின் கொள்கைகளையும், எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி அதை அரசியல் வெற்றியாக மாற்றவேண்டும்.
மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரேயொரு கோரிக்கை விடுக்கின்றேன்.
எமது கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகின்றனர். ஆகையால், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தாருங்கள். அது போதும்” என கூறியுள்ளார்.
