Home உலகம் மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானம் நடுவானில் கோளாறு : அதிர்ச்சியில் பயணிகள்

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானம் நடுவானில் கோளாறு : அதிர்ச்சியில் பயணிகள்

0

ஹொங்கொங்கில் (Hong Kong) இருந்து டெல்லி (Delhi) வந்த ஏர் இந்தியா (Air India) விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் (Ahmedabad) அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 அப்பாவி பயணிகள் உயிரிழந்தனர். 

இந்த விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விமானத்தில் பயணிப்பவர்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உள்ளனர்.

ஏர் இந்தியா விமானம்

இந்த நிலையில், ஹொங்கொங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

நடுவானில் பறந்தபோது விமானி, தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்த நிலையில், மீண்டும் விமானத்தை ஹொங்கொங்கிற்கு திருப்பியுள்ளார்.

கோளாறு ஏற்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விமானத்தைப் பணியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை சமீபத்தில் விமான விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று வருவதால், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version