Home உலகம் இஸ்ரேலுக்கான இந்திய விமானங்கள் அதிரடியாக ரத்து.!

இஸ்ரேலுக்கான இந்திய விமானங்கள் அதிரடியாக ரத்து.!

0

இஸ்ரேலுக்கான விமானங்களை மே 6 ஆம் திகதி வரை ரத்து செய்வதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் பிரதான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டெல் அவிவ்வுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை மே 6, 2025 வரை உடனடியாக நிறுத்தி வைக்கப்பதாக நிறுவனம் அதன்போது அறிவித்துள்ளது.

கடுமையான பதிலடி

இந்த நிலையில், ஏமனில் செயற்பட்டு வரும் ஹவுதி அமைப்பு, இஸ்ரேலின் மிக முக்கிய பென் குரியன் விமான நிலையத்திற்கு அருகில் பாலஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஒன்றை இன்று (04) நடத்தியது.

குறித்த தாக்குல் காரணமாக சுமார் எட்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதற்கு எதிராக கடுமையான பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் தரப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version