ஈரானின் (Iran) உயர்மட்ட தலைவர் அலி கமேனி (Ali Khamenei) நிலத்தடி பதுங்கு குழிக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகிழக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழிக்கு அவர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நகர்வு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பதுங்கு குழி
இந்தநிலையில், ஈரானின் லாவிசான் என்ற பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் கமேனி தனது குடும்பத்தினருடன் இருப்பதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, கமெனியின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கான இறுதி வாய்ப்பை வழங்குவதற்காக இஸ்ரேல் நடவடிக்கையின் அவரைப் படுகொலை செய்யவில்லை என்று மத்திய கிழக்கில் உள்ள ஒரு இராஜதந்திர ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கிய போது அவர் பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
