Home உலகம் அமெரிக்க நிலைகள் எங்கள் காலடிக்குள் : போருக்கு தயார் என அறிவித்த நாடு

அமெரிக்க நிலைகள் எங்கள் காலடிக்குள் : போருக்கு தயார் என அறிவித்த நாடு

0

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க(us) நலன்களும் ஈரான்(iran) இராணுவத்தின் எல்லைக்குள் உள்ளன என்று
ஈரான் இராணுவத்தின் தரைப்படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்டாரி(Brigadier General Kioumars Heidari,), கூறியுள்ளார்.

சனிக்கிழமை(11) நடைபெற்ற ஒரு விழாவின் போது, ​​பிரிகேடியர் ஜெனரல் ஹெய்டாரி, “எதிரி, ஈரானுக்கு எதிராக ஒரு கலப்பினப் போரை நடத்துகின்றான். எனவே இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

எதிரியின் உளவியல் மற்றும் கலப்பினப் போரின் நோக்கம்

எதிரியின் உளவியல் மற்றும் கலப்பினப் போரின் நோக்கம் பொதுமக்களின் கருத்தை பாதித்து, சட்டவிரோத நலன்களை நோக்கி மனதைத் திருப்புவதாகும் என்று அவர் மேலும் விளக்கினார்.

“எனவே, எதிரியின் இந்த உத்தியை நிர்வகிப்பதும் நிவர்த்தி செய்வதும் நிகழ்ச்சி நிரலில் இருக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

முழுமையான போருக்குத் தயார்

கூடுதலாக, பிராந்தியத்தில் உள்ள ஈரானிய இராணுவ தரைப்படைகளுக்குள் உள்ள அனைத்து டாங்கிகள், உல்குவானுர்திகள் மற்றும் ட்ரோன்கள் முழுமையாகப் போருக்குத் தயாராக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version