Home உலகம் ரஷ்யாவிற்கு ஆதரவளித்தால்..சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவிற்கு ஆதரவளித்தால்..சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

0

உக்ரைன் மோதலில் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பனிப்போருக்குப் பின்னர் இந்த ஒத்துழைப்பு ஐரோப்பிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறியதாக வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவின் நடவடிக்கை என்ன

அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலுடனான மோதலை மேலும் அதிகரிப்பதற்கு எதிராக ஈரானுடனான தனது உறவை சீனா பயன்படுத்துகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.

தாய்வானில் தொடரும் நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்

சீர்கெட்டுப்போன உறவு

இதேவேளை வோஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் தைவான் மற்றும் தென் சீனக் கடல் மீதான சீனாவின் உரிமைகோரல்களாலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மீதான அமெரிக்க ஏற்றுமதி தடைகளாலும் சிதைந்துள்ளன.

உலகின் அதி சக்தி வாய்ந்த இராணுவ பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

கடந்த பெப்ரவரி மாதம் உளவு பலூன்தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவை மேலும் பாதிப்பை உருவாக்கியிருந்தன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version