Home உலகம் நடுவானிலிருந்து கீழே விழுந்த விமானத்தின் அவசரகால கதவு: பீதியடைந்த பயணிகள்

நடுவானிலிருந்து கீழே விழுந்த விமானத்தின் அவசரகால கதவு: பீதியடைந்த பயணிகள்

0

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானமொன்றின் அவசரகால கதவு நடுவானில் இருந்து கீழே விழுந்ததில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஜோன் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து(John F. Kennedy International Airport) சென்ற விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டெல்டா ஏர்லைன்ஸ்(Delta Air Lines) விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக விமானம் ஒன்று லொஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை

அவசரகால கதவு 

இந்நிலையில் அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.

இதுபற்றி விமானிக்கு தகவல் சென்ற நிலையில் உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயோர்க்குக்கு(New York) திரும்பியுள்ளது.

குறித்த சம்பவமானது விமானம் புறப்பட்டு 33 நிமிடங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இது தொடர்பாக குறித்த விமானத்தில் பயணித்த பயணியொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மனித உடலமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

டெல்டா விமான நிறுவனம்

இது தொடர்பாக அவர்  தெரிவிக்கையில், விமானத்தில் இருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது இதனால் விமானி அறையில் இருந்து அடுத்து வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியவில்லை.

இந்த சம்பவ எதிரொலியாக பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டெல்டா விமான நிறுவனத்தின் விமான பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், எங்களுடைய நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிப்பதாகவும் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி அந்நாட்டின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிறுவர்கள்… வலுக்கும் சி.ஐ.டி விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version