Home உலகம் சீனாவில் வீதி அமைக்க வீட்டை கொடுக்க மறுத்த முதியவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சீனாவில் வீதி அமைக்க வீட்டை கொடுக்க மறுத்த முதியவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

0

சீனாவை (china)சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டை அரசாங்கத்துக்குக் கொடுக்க மறுத்ததால் தற்போது நாளாந்தம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார்.

  சீனாவின் ஷாங்காயின் தென்மேற்கில் உள்ள ஜின்சி நகரில் வசிப்பவர் ஹுவாங் பிங். இவரது 2மாடி வீடு இருக்கும் பகுதியில் அரசாங்கம் நெடுஞ்சாலை அமைத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் அரசு கொடுத்த நஷ்டஈடு தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

அரசு அதிகாரிகள் மன்றாடியும் பிடிவாதத்தை கைவிடாத முதியவர்

ஆனால் முதியவர் ஹுவாங் பிங் தனது வீட்டை விற்க ஒரேயடியாக மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று அவர் கூறினார். அரசு அதிகாரிகள் பல முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ரூ.2 கோடி வரை நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் பேசிப்பார்த்துள்ளனர். ஆனால் முதியவரை என்ன சொல்லியும் வழிக்கு கொண்டுவர முடியவில்லை என்பதால் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

தற்போது கவலையில் முதியவர்

ஆனால் அதன்பின்தான் முதியவருக்கு சிக்கல் ஆரம்பித்துள்ளது. அவரின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இரு பக்கமும் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது.

இதனால் முதியவர் தற்போது தனது பிடிவாதத்தின் விளைவை நினைத்து வருந்தி வருகிறார்.

அரசு பணம் தருவதாக சொன்னது நியாயமானதாக இப்போது தெரிகிறது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு வாகனங்கள் இரைச்சல், தூசியுடன், தனி வீட்டில் இருக்க முடியாது.

முந்தைய காலத்துக்கு என்னால் செல்ல முடிந்தால், அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு என் வீட்டை இடிக்க ஒப்புக் கொள்வேன். ஆனால் இப்போது அது முடியாது என்று அவர் கவலையுடன் உள்ளார்.

NO COMMENTS

Exit mobile version