Home முக்கியச் செய்திகள் யாழிற்கு வரும் சர்ச்சை பெண் சாமியார் : வலுக்கும் கண்டனம்

யாழிற்கு வரும் சர்ச்சை பெண் சாமியார் : வலுக்கும் கண்டனம்

0

தன்னை ஆதிபாராசக்தியின் வடிவம் என கூறிகொண்டு சர்ச்சையில் சிக்கிய பெண் சாமியார் அன்னபூரனி அரசு அம்மா அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பிரபல சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரனி. இவர் தனக்கு தானே கோவில் கட்டி, அந்த கோவிலில் நான் தான் கடவுள் என்று கூறி அருள்பாலித்து வருகிறார். 

பெண் சாமியார்

ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த இவர் அரசு என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அரசு இறந்துவிட்டதால் அவருக்கு சிலை அமைத்து அவரை அன்னபூரனி வழிபட்டு வந்தார். 

இந்த நிலையில் 3வதாக ரோகித் என்பவரை அன்னபூரனி திருமணம் செய்துள்ளார். தெய்வீக திருமணம் என பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பெண் சாமியாரான அன்னபூரனி அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது இது தொடர்பான அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

மேலும், அவரின் வருகைக்கு யாழில் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version