Home உலகம் கறுப்பின கைதியை மரணஅடி அடித்து சித்ரவதை செய்த காவல்துறை : பரபரப்பு காணொளி

கறுப்பின கைதியை மரணஅடி அடித்து சித்ரவதை செய்த காவல்துறை : பரபரப்பு காணொளி

0

அமெரிக்காவின் (United States) நியூயார்க் சிறையில் கறுப்பின கைதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் காவல்துறையினரால்  தாக்கப்பட்ட அடுத்த நாளே அந்த கைதி உயிரிழந்துள்ளார்.

மற்ற சில அதிகாரிகளில் உடையில் பொருத்தப்பட்ட  கேமராவில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பணிநீக்கம்

43 வயதான ராபர்ட் ப்ரூக்ஸ் என்ற நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி நியூயார்க்கில் உள்ள மார்சி கரெக்ஷனல் ஃபெசிலிட்டியில் வைத்து இந்த நபர் அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 13 அதிகாரிகள் மற்றும் சிறை உதவியாளர் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ராபர்ட் ப்ரூக்ஸ், 2017 ஆம் ஆண்டு முன்னாள் காதலியை கத்தியால் குத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version