Home உலகம் உலகை உலுக்க காத்திருக்கும் மற்றுமொரு வைரஸ்: சீனாவில் மோசமடையும் நிலைமை

உலகை உலுக்க காத்திருக்கும் மற்றுமொரு வைரஸ்: சீனாவில் மோசமடையும் நிலைமை

0

கொரோனா தொற்று பரவி 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் மற்றுமொரு வைரஸ் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனை ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதுடன், கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

அதிகாரிகளின் கவனம் 

எனினும், சீனாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, சீனாவில் இன்புளுவன்சா வைரஸும் (Influenza virus) பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நோய் நிலைகள் தொடர்பில் சீன சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version