காசா (Gaza) போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைகளுக்காக இஸ்ரேல் (Israel) சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken) போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்துவதில் தோல்வியுற்ற நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
அந்தவகையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை (18) இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற அவர், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த பேச்சுவார்த்தை முடிவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்னர், போர்நிறுத்தப் பேச்சு வார்தைகளில் மத்தியஸ்தராக விளங்கும் எகிப்து (Egypt), கத்தார் நாட்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
[HMDG6ID
]
ஹமாஸ் அமைப்பினர்
அதேவேளையில் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவின் (USA) பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளது.
இதனால், இந்த நிலையில் 9-வது முறையாக பயணம் மேற்கொண்ட நிலையிலும் வெற்றிபெற முடியாமல் ஆண்டனி பிளிங்கன் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.