Home இலங்கை இந்திய பிரதமரின் இலங்கை வருகையை உறுதிப்படுத்திய ஜனாதிபதி

இந்திய பிரதமரின் இலங்கை வருகையை உறுதிப்படுத்திய ஜனாதிபதி

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) 2025 ஏப்ரல் 05 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வ
விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.

2025 வரவுசெலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு விவாதத்தின் இறுதி நாளான
இன்று(21) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) இந்த தகவலை
வெளிப்படுத்தினார்.

இந்தியப் பிரதமரின் வருகை

இந்தியப் பிரதமரின் வருகையுடன் சம்பூர் சூரிய மின்சார உற்பத்தி நிலையத்தின்
கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாட்டின்
ஸ்திரத்தன்மை காரணமாகவே வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை
தருவதாகவும் ஜனாதிபதி திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரண்டு மாதங்களுக்குள் சியம்பலாண்டுவவில் ஒரு புதிய சூரிய மின்சார
நிலையத்தையும் மன்னாரில் 50 மெகாவாட் புதிய காற்றாலை மின் நிலையத்தையும்
நிர்மாணிக்கமுடியும் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி திசாநாயக்க
தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/anura-confirms-narendra-modi-s-visit-to-sri-lanka-1742575258

NO COMMENTS

Exit mobile version