பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை இலங்கை வர்த்தக சம்மேளனம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (Ceylon Chamber of Commerce) வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து மேற்படி வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனம்
குறித்த கடிதத்தில், மக்களுக்கு விரும்பத்தக்க பலன்களை வழங்கக்கூடிய விவேகமான வளர்ச்சி உத்திகளை உருவாக்குவதில், புதிய ஜனாதிபதி அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஆட்சியை பிடித்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.