Home இலங்கை அரசியல் அனுரகுமார சுவீடன் விஜயம்

அனுரகுமார சுவீடன் விஜயம்

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சுவீடனுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இன்றைய தினம் இரவு அவர் சுவீடன் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவீடனின் ஸ்டோக்கோமில் இலங்கை புலம்பெயர் சமூகத்துடன் சனிக்கிழமை சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

கனடா விஜயம்

இதனைத் தவிர வேறும் சில சந்திப்புக்களையும் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ள உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் பிரிவு இந்த விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/anura-kumara-leaves-for-sweden-tonight-1714061329

NO COMMENTS

Exit mobile version