அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) நகர்வுகள் நாடாளுமன்ற தேர்தலை நோக்கியதாகவே உள்ளது என கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அநுரவின் வெற்றி என்பது சிங்கள மக்களின் கடந்த கால அதிருப்தியினால் கிடைத்த வெற்றியாகும்.
வழமை போன்று தமிழர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற எச்சரிக்கை உணர்வோடுதான் நாம் பயணிக்க வேண்டும்.
நாட்டில் இவ்வளவு இன அழிப்பு இடம்பெற்றிருக்கும் நிலையில் பொருளாதாரம் மட்டும் தான் தற்போது பிரச்சினையாக உள்ளது என கூறுவது அபத்தமாகும்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலின் பின் அநுர குமார நாயக்கவின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அநுர குமார திசாநாயக்க அமெரிக்காவுடனான உறவை கட்டியெழுப்பலாம்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி
https://www.youtube.com/embed/827mZj-a9_4