Home உலகம் நிறைவேறாமல் போன ஹிஸ்புல்லாவின் கனவு: பதிலடியை அறிவித்த நெதன்யாகு

நிறைவேறாமல் போன ஹிஸ்புல்லாவின் கனவு: பதிலடியை அறிவித்த நெதன்யாகு

0

தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), இதற்கு பதிலாக பாரிய விலையை கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

மத்திய இஸ்ரேலின் (Israel) சிசேரியாவில் உள்ள அவரது வீட்டின் மீது சனிக்கிழமை (19) நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒரு கசப்பான தவறு

அத்தோடு, தன்னையும் தன் மனைவியையும் படுகொலை செய்ய முயன்றவர்கள் இன்று ஒரு கசப்பான தவறு செய்துவிட்டனர் என்றும் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமுறை தலைமுறையாக தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எதிரிகளுக்கு எதிரான மறுமலர்ச்சிப் போரைத் தொடர்வதில் இருந்து தன்னையும் இஸ்ரேல் அரசையும் குறித்த தாக்குதல் தடுக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்

இந்த நிலையில், லெபனானில் இருந்து ஆளில்லா விமானம் ஏவப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், பிரதமர் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும் செய்தித் தொடர்பாளரும் அறிவித்திருந்தார்.

அந்த நேரத்தில் அவரும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை என்றும் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version