Home உலகம் கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்

0

கனடாவில் (Canada) சர்வதேச மாணவர்களுக்கான விண்ணப்ப எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் 23 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் 

கடந்த 2024 ஆம் ஆண்டில் 23, 5000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் இந்த ஆண்டில் 181,500 விண்ணப்பங்களே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவர் வீசா எண்ணிக்கை இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் மேலும் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசாங்கம் சர்வதேச மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version