Home உலகம் விளாடிமிர் புட்டினை கொலை செய்ய சதி..! தீப்பிடித்து எரிந்த கார்

விளாடிமிர் புட்டினை கொலை செய்ய சதி..! தீப்பிடித்து எரிந்த கார்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) கொன்வாயில் சென்ற வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மொஸ்கோவில் (Moscow) உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது.

இது ஜனாதிபதி புடினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.

தீப்பிடித்து எரிந்த கார்

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான காணொளிகளில் கார் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி கொன்வாயில் இடம்பெற்று இருந்த ஔரஸ் செனட் லிமோசின் ரக கார் ஒன்றின் எஞ்சின் பகுதியில் தீ பரவ ஆரம்பித்து பிறகு முகப்பு பகுதி முழுக்க பரவியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது.

தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

https://www.youtube.com/embed/dhVaW1DI7Ic

NO COMMENTS

Exit mobile version