Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல்…நன்றிக்கடனுக்காக ரணிலை ஆதரிக்கின்றோம் : அதாவுல்லாஹ் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல்…நன்றிக்கடனுக்காக ரணிலை ஆதரிக்கின்றோம் : அதாவுல்லாஹ் அறிவிப்பு

0

நாட்டின் நலன்கருதியும் நன்றிக்கடனுக்காகவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரிக்கின்றோம் என தேசிய காங்கிரஸ் (National Congress) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் (A. L. M. Athaullah) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அண்மையில் அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கில் இடம்பெற்ற தேசிய காங்கிரஸின் 20வது பேராளர் மாநாட்டில்  உரையாற்றும்
போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”ஒரு
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதை ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல்

நாங்கள் நாட்டின் நலன்கருதியும்
நன்றிக்கடனுக்காகவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினை
(Ranil Wickremesinghe) ஆதரிக்கின்றோம்.

அரசியல் என்பது காலத்தின் தேவை. இன்று பிரதமராக இருந்து
ஜனாதிபதி தேர்தல் கேட்போர் எவரும் இல்லை. வழக்கமாக நான் கூறுவது போன்று
பால்போத்தல்கள் உருண்டு ஓடுகின்றது.

இன்று முகப்புத்தக போராளிகளுக்கு அரசியல் என்பது புரியாத புதிராக
இருக்கின்றது. ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) அரசியலுக்கு நேற்று வந்த பிள்ளை. சொந்த
தேவைகளுக்கு அப்பால் அந்த அந்த காலங்களில் தலைவர்களை தெரிவு செய்தது தேசிய
காங்கிரஸ் என்பதை சகலரும் அறிய வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம்

யுத்தம், கடலலை, சூறாவளி போன்றவற்றை
நாம் பார்த்திருக்கின்றோம். அவை அழிவுகள், ஆனால் எரிவாயு, பெட்ரோல் இன்றி
வீதியில் அநாதரவாக இருந்த சந்தர்ப்பங்கள் தான் முதல் சொன்ன அழிவுகளை விட
கொடுமையிலும் கொடுமை. பத்தும் பறக்கின்ற கொடுமை. எத்தனை பெட்ரோல் பவுசர்கள்
எரிக்கப்பட்டன.

இது தவிர தேசிய காங்கிரஸ் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி எப்போதும்
பேசிக்கொண்டு தான் இருக்கின்றது. எப்போதும் உண்மையையே பேசிக்கொண்டு
இருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி கொரோனா மையத்துக்கள் எரிக்கின்ற போது நான்
நாட்டில் இருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version