Home உலகம் வெளிநாடொன்றில் விமானப்படை தளம் மீது தாக்குதல் : பலர் படுகாயம்

வெளிநாடொன்றில் விமானப்படை தளம் மீது தாக்குதல் : பலர் படுகாயம்

0

பங்களாதேஷில்(bangladesh) விமானப்படை தளம் மீது மக்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது அருகிலுள்ள சமிதிபாரா பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.

மக்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையே வாக்குவாதம்

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஷிஹாப் கபீர் நஹித் (25) என்பவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் மக்களுக்கும் வங்கதேச விமானப்படையினருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மக்கள், விமானப்படை தளம் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குக்கான காரணம் குறித்து விசாரணை

 தாக்குதலுக்குக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version