Home உலகம் அமெரிக்காவின் இந்து கோவில் மீது தாக்குதல் : இந்திய தூதரகம் கடும் கண்டனம்

அமெரிக்காவின் இந்து கோவில் மீது தாக்குதல் : இந்திய தூதரகம் கடும் கண்டனம்

0

அமெரிக்காவின் (United States) மிகப்பெரிய இந்து கோவில் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது அமெரிக்காவின் –  நியூயோர்க்கில் (New York ) மெல்வில்லே பகுதியில் அமைந்துள்ள சுவாமிநாராயண் கோவில் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய (India) தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகம்

இது தொடர்பில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்தோடு கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய அமெரிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அமெரிக்காவில் சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த தாக்குதல் சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் அத்தோடு இந்து கோவிலைத் தாக்குபவர்களின் கோழைத்தனத்தைப் புரிந்துகொள்வது கடினம் என சுவாமிநாராயண் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலுக்குள்ளான இந்த ஆலயம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version