Home உலகம் மேடையில் திடீரென தடுக்கி வீழ்ந்த அவுஸ்திரேலிய பிரதமர்(வைரலாகும் காணொளி)

மேடையில் திடீரென தடுக்கி வீழ்ந்த அவுஸ்திரேலிய பிரதமர்(வைரலாகும் காணொளி)

0

மேடையில் தவறி விழுந்த அவுஸ்திரேலியா பிரதமர் அன்டனி அல்பனீஸ் (Anthony Albanese), உடனடியாக சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்று எதுவும் நடக்காதது போல் கையசைத்தார்.

அவுஸ்திரேலியாவில் (Australia) வரும் மே மாதம் பொது தேர்தல் நடைபெற உள்ளது. அல்பனீஸ் தற்போது மே 3ம் திகதி நடைபெறும் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கால் இடறி கீழே சாய்ந்தார்

இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனீஸ் 62, நியூ சவுத் வேல்ஸில் நடைபெற்ற சுரங்க மற்றும் எரிசக்தி தொழிற்சங்க மாநாட்டில் தனது பேச்சை முடித்துவிட்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தபோது, கால் இடறி கீழே சாய்ந்தார். எனினும் சுதாரித்துக்கொண்ட அவர், விரைவாக மீண்டார்.

இந்த சம்பவம் காணொளியில் பதிவாகி இருந்தது, அதில் அல்பனீஸ் சமாளித்து, சிரித்துக்கொண்டே எழுந்ததைக் காண முடிந்தது. உடனடியாக எழுந்து நின்று, கூட்டத்தினரை நோக்கி, தான் நலமாக இருப்பதாக இரு கைகளையும் நீட்டி சைகை செய்தார்.

 நான் நன்றாகவே இருக்கிறேன்

இது தொடர்பாக அல்பனீஸ் கூறுகையில், ”நான் ஒரு அடி பின்வாங்கினேன். நான் மேடையில் இருந்து விழவில்லை. ஒரு கால் மட்டும் கீழே விழுந்தது, ஆனால் நான் நன்றாகவே இருக்கிறேன்,” என்றார்   

https://www.youtube.com/embed/dbpPuKjfN8I

NO COMMENTS

Exit mobile version