Home உலகம் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆகும் ஆன்டனி ஆல்பனீஸ் – 21 ஆண்டுகளில் நடந்த சாதனை

மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆகும் ஆன்டனி ஆல்பனீஸ் – 21 ஆண்டுகளில் நடந்த சாதனை

0

பிற நாடுகளில் இருந்து வேறுபட்டு இருப்பதை உறுதி செய்வதற்காக அவுஸ்திரேலிய பாணியில் மக்கள் வாக்களித்துள்ளனர் என அன்டனி அல்பனீஸ் (Anthony Albanese
) தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் (Australia) இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் அன்டனி அல்பனீஸ் பிரதமராகிறார்.  

தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து கருத்து வெளியிட்ட அன்டனி அல்பனீஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நமக்கென்று ஒரு தனித்தன்மை

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவின் பண்பாட்டை மீட்பெடுப்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனா்.

நாட்டின் எதிா்காலம் அவுஸ்திரேலிய கலாசாரத்தில் இருந்து விலகாமல், பிற நாடுகளில் இருந்து வேறுபட்டு இருப்பதை உறுதி செய்வதற்காக அவுஸ்திரேலிய பாணியில் மக்கள் வாக்களித்துள்ளனா்.

நாம் எந்தவொரு வெளிநாட்டிடம் இருந்தும் கொள்கைகளைக் கடன் வாங்கவோ, பிரதியெடுக்கவோ தேவையில்லை. நமக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது எனத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய தேர்தல் வரலாற்றில்

அவுஸ்திரேலிய தேர்தல் வரலாற்றில் கடந்த 21 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் முதல் அவுஸ்திரேலிய பிரதமராக அன்டனி அல்பானீஸ் காணப்படுகின்றார்.

அவுஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.

அந்த வகையில் சனிக்கிழமை (3) இடம்பெற்ற அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில், அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் போட்டியிட்டன.

பிரதமர் அண்டனி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீற்றர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது.

ஆளும் தொழிலாளர் கட்சி

தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அன்டனி அல்பனீஸ் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமராகிறார்.

அல்பனீஸ் 2 ஆவது தடவையாக அவுஸ்திரேலிய பிரதம் ஆகிறார். பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமராக 2வது முறையாக தேர்வாகியுள்ள அந்தோணி அல்பனீசுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்திரேலிய பிரதரமராக மீண்டும் தேர்வாகியுள்ள அந்தோணி அல்பனீசுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி ஆஸ்திரேலிய மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 

இந்தோ-பசுபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சியை கொண்டு செல்ல இந்தியா- ஆஸ்திரேலியா நட்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version