Home இலங்கை இலங்கை அரசியலமைப்பு சரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை அரசியலமைப்பு சரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

0

இலங்கை(Sri Lanka) ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஒரு பந்தியில் திருத்தம் மேற்கொள்ளப்பட கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அங்கீகாரமானது, 2024.07.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லுக்கு மாற்றாக ‘ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லை பதிலீடு செய்து அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியைத் திருத்தம் செய்யவே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் திருத்தம்

இதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில்
வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும் அதிபரும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version