Home இலங்கை இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை விரைவில்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை விரைவில்

0

தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon Musk) நிறுவிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு(Srilanka) வருகை தந்துள்ளனர்.

ஸ்டார்லிங்க் செய்மதி இணையச் சேவை இணைப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக, குறித்த பிரதிநிதிகள் குழு வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பணிகளை புதுடெல்லியை(New Delhi) தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் பிரதிநிதி ஒருவரே மேற்கொண்டு வருகிறார்.

அவர், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட தேவையான நிறுவன பிரதிநிதிகளுடன் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

ஸ்டார்லிங்க் இணைப்பு 

இதேவேளை, தமது செயற்கைக்கோள் செயற்திட்டத்தை இலங்கையில் செயல்படுவதற்கு தேவையான உரிமத்தை பெறுவதற்கான இறுதிக் கட்ட பணிகளுக்காக அவர் மீண்டும் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளார் என இலங்கை அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

எனவே குறித்த ஒப்புதலானது, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு நாட்டில் செயல்பாடுகளுக்கான உரிமத்தைப் பெற வழி வகுத்துள்ளது.

மேலும், எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஸ்டார்லிங்க் இணைப்பை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

NO COMMENTS

Exit mobile version