Home உலகம் கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்நோய்த்தாக்கமானது அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பரவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமான பொருட்களுக்கு வருகிறது விலை சூத்திரம்

எச்சரிக்கை

இதன் காரணத்தால் அமெரிக்காவில் கறந்த பாலில் இருந்து எச்5என்1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அத்துடன், கறந்த பாலை அருந்துவதைத் தவிர்க்குமாறும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸானது பறவைகள், விலங்குகள், மனிதர்களிடையே பரவி வருகிறது.

காலத்திற்கு பொருத்தமில்லாத பொது வேட்பாளர் :பிள்ளையான் அறிவிப்பு

உயிரிழப்பு

இந்த வைரஸானது மிக எளிதாக மனிதர்களுக்குப் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்போது வௌவால்கள், பூனைகள், கரடி, நரி, பென்குயின்களுக்கும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் விலங்குகளின் பட்டியலில் மாடு சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு : இந்தியாவை பின்தள்ளி முதலிடம் பிடித்தது சீனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version