Home உலகம் ஈரான் மீது பறந்து ஒத்திகை பார்த்த அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள்

ஈரான் மீது பறந்து ஒத்திகை பார்த்த அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள்

0

என்ன நடக்கின்றது என்று உணர்ந்துகொள்வதற்கு முன்னர் ஈரானின் நிலக்கீழ் தளங்கள் தாக்கப்பட்டுவிடவேண்டும்…  ஈரான் சுதாரித்து எழுவதற்கு முன்னதாக, அந்தத் தளங்கள் அத்தனையும் தாக்கி அழிக்கப்பட்டுவிடவேண்டும்.

அமெரிக்காவினால் அது முடியுமா என்பதுதான்- இன்றிருக்கின்ற மிகப் பிரதானமான கேள்வி.

பலஸ்டிக், ஹைபர்சோனிக், குரூஸ் ஏவுகணைகளைக் கொண்ட ‘இமாம் அலி’ மற்றும் ‘பக்ரதான்’ போன்ற தளங்கள், அணுசெறிவூட்டும் தளங்கள், அணுவாயுதங்கள் போன்ற பல இரகசிய ஆயுதங்களை சேமித்துவைக்கக்கூடிய தளங்கள், இராணுவக் கட்டளை மையங்கள் என்று- நிலத்துக் கீழே ஒரு பலமான இராஜ்யத்தையே அமைத்து பேணி வருகின்றது ஈரான்.

அதுவும் நிலத்துக்குக் கீழே பல மீற்றர் ஆழத்தில் இதுபோன்ற நூறுக்கும் அதிகமான தளங்களை அமைத்து அந்தத் தளங்கள் பேணப்பட்டு வருகின்றன.

இவை அத்தனையையும் தாக்கி அழிக்கும் வல்லமை அமெரிக்காவுக்கு இருக்கின்றதா?

ஈரானின் நிலக்கீழ் தளங்களை ஊடுருவித் தாக்கி அழிக்க அமெரிக்கப் படையினரால் முடியுமா?

‘முடியும்’ என்று கூறுகின்றார்கள் அமெரிக்க போரியல் வல்லுனர்கள்.

போரியல் வல்லுனர்கள் கூறுகின்ற சில இராணுவ விவகாரங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

 

https://www.youtube.com/embed/lG12gR5BIzk

NO COMMENTS

Exit mobile version