தற்போது இணையத்தில் பாபா வாங்காவின் (Baba Vanga) கணிப்பு ஒன்று வைரலாகி வருகின்றது.
பல்கேரியாவின் (Bulgaria) பிரபலமான தீர்க்கதர்சியான பாபா வங்காவின் குறிப்புகளில் பல சம்பவங்கள் இன்று வரை உண்மையாகி வருகின்றன.
இதில், டயானாவின் (Diana) மரணம் மற்றும் சீனாவின் (China) எழுச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மனித இனம்
இருப்பினும், மனித இனம் எப்போது அழியும் என்பது வரையும் பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது வைரஸ் குறித்த அவரது கணிப்பு ஒன்று வைரலாகி வருகின்றது.
ஆபத்தான வைரஸ்
இதன்படி, ஒரு ஆபத்தான வைரஸ் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு வேகமாக பரவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸானது மக்களின் வயதை வேகமாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் விரைவில் வயதானவர்களாக காட்சியளிக்கத் தொடங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
