கிரிக்கெட் போட்டி திடலில் குழந்தை பெற்றெடுத்த ரசிகை மற்றும் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு காதலிக்கு முன்னே மண்டியிட்டு கோரிய காதலனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காதலி என மறக்க முடியாத சம்பவங்கள் தென்னாபிரிக்க சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் இடம்பெற்றுள்ளது.
தென்னாபிரிக்கா(south africa) மற்றும் பாகிஸ்தானுக்கு(pakistan) இடையே வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி வெறும் கிரிக்கெட் போட்டியைவிடவுடம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி, மறக்கமுடியாத நாளாக அமைந்துள்ளது.
போட்டியின் போது கிரிக்கெட் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் திடீரென, “வாழ்த்துகள் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ரபெங். அவர்களுக்கு புதிதாக மகன் பிறந்துள்ளான்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மைதான மருத்துவ நிலையத்தில் பிறந்த குழந்தை
மேலும், கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால், ஆரவாரமடைந்த ரசிகர்கள் கை தட்டி உற்சாகமாக சத்தமிட்டனர்.
‼️History made as woman gives birth at Wanderers Cricket Stadium while another couple got engaged during the Pink Day ODI‼️👩🏽🍼💍
The Rabeng’s were assisted by the Medics and gave birth to a baby boy at 17:20 in JHB
The Proteas need 309 runs to win and avoid a series whitewash pic.twitter.com/VhAlVPhLtd
— Xoli Zondo (MBA) (@XoliswaZondo) December 22, 2024
அதுமட்டுமின்றி போட்டி இடைவேளையின் போது, கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கையில் மோதிரத்துடன் மண்டியிட்டு, தனது காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
காதலை ஏற்க கோரிய காதலன்
அவரது காதலை அந்தப் பெண் ஏற்றுக்கொண்ட போது கூட்டத்திலிருந்து ஆரவாரம் வெடித்தது. அப்போதும் ரசிகர் கைகளைத் தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கிரிக்கெட்டில் சாதனைகள் மட்டுமன்றி இதுபோன்ற மறக்கமுடியாத மைல்கல் நிகழ்வுகளும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன என்று கிரிக்கெட் ரசிகர்களும், இணையவாசிகளும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.