அமெரிக்காவில் (USA) தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் போட்டியிடுகின்றனர்.
சிறப்புரிமை மூலம் தபால் வாக்கு உள்ளிட்ட முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றது.
மர்ம நபர்களால் தீ
ஜனாதிபதி ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களிக்கக் காத்திருந்தவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்ற ஜோ பைடன் 40 நிமிட காத்திருப்புக்கு பின்னர் இறுதியில் தனது வாக்கினை செலுத்தினார்.
இவ்வாறான நிலையில், ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் வாக்குகளுடன் கூடிய 2 வாக்குப் பெட்டிகளுக்கு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வொஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
எப்.பி.ஐ. விசாரணை
இரு சம்பவங்களிலும் தீயணைத்துப்புத்துறை துரிதமாக செயல்பட்டு தீயை அனைத்தது. இருப்பினும் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான வாக்குச்சீட்டுகள் தீயில் புகைந்து சேதமடைந்தன.
இந்த சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ. (CBI) விசாரித்து வருவதுடன் இதை செய்தது ஒரே கும்பலா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
https://www.youtube.com/embed/KvJoTQnVGeE