Home உலகம் கனேடிய நிதிக் கொள்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

கனேடிய நிதிக் கொள்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

0

கனடாவின் (Canada) பணவீக்க நிலைமைகள் சாதகமான நகர்வினை நோக்கி பயணிப்பதாக கனேடிய மத்திய வங்கியின் ஆணையாளர் ரிப் மெக்கலம் ( Macklem) தெரிவித்துள்ளார்.

கனேடிய மத்திய வங்கி நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு விதத்திற்கும் குறைந்த அளவில் பேணும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் தமது இலக்கினை எட்டக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கனடாவில் வட்டி வீதம்

கடந்த நான்கு ஆண்டுகள் காலப்பகுதியில் முதல் தடவையாக கனடாவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டு உள்ளது.

கனடிய நிதிக் கொள்கையில் ஏற்பட்ட பாரிய நிதி மாற்றமாக இது கருதப்படுகிறது.

எவ்வாறு எனினும் கனடாவில் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டில் ஒரு சதவீத புள்ளியை விட உயர்ந்துள்ளது, இது மே மாதத்தில் 6.2 சதவீதத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version