பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிய ஈழவர் திரைக்கலை மன்றத்தின் முன்னாள் தலைவரும் சட்ட நிபுணருமான (பரிஸ்ரர்) எஸ்.ஜே.ஜோசெப் காலமாகியுள்ளார்.
ஒரு சட்ட நிபுணராக இருந்தாலும் புலம்பெயர் தமிழர்களின் நாடகத்துறை மற்றும் குறும்படத்துறைகளுக்கு இவர் பங்களிப்புச் செய்தார்.
அத்துடன் ஈழத்தமிழர்களின் திரைப்படத்துறை வளர்ச்சியடையவேண்டும் என்ற நோக்கத்தில் ஈழவர் திரைக்கலை மன்றம் என்ற ஒரு அமைப்பை நிறுவி கலைஞர்களை ஒருங்கிணைத்த பணியை செய்தவர்.
இரங்கல் செய்தி
மேலும் சட்டத்துறை சார்ந்து உதவிகள் தேவைப்படும் பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களுக்கும் ஜோசெப் உதவிசெய்துள்ளார்.
இந்தநிலையில் ஜோசெப் அவர்களின் மறைவை முன்னிட்டு கலைத்துறை மற்றும் சட்டத்துறை ஆர்வலர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
