Home உலகம் உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு : தீயாய் பரவும் தகவல்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு : தீயாய் பரவும் தகவல்

0

உலகப் புகழ்பெற்ற திருப்பதி(tirupati) லட்டு தொடர்பில் பரவும் வதந்திக்கு தேவஸ்தானம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் அந்த வதந்தியை முற்றாக மறுத்துள்ளது.

திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.திருப்பதி லட்டு பிரசாதத்தை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தயாரித்து வருகின்றனர்.

லட்டு தயாரிக்கும் ஒப்பந்தம்

இந்நிலையில திருப்பதி லட்டு தயாரிக்கும் ஒப்பந்தம் தோமஸ் என்ற தனி நபருக்கும் அவரது குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பது தொடர்பான பொய்ப் பிரசாரத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கடுமையாகக் கண்டிக்கிறது என தெரிவித்துள்ளது.

தகவல்கள் தவறானவை

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கும் ஒப்பந்தம் தோமஸ் என்பவருக்கு வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் மற்றும் தகவல்கள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version