Home உலகம் புதிய போப்பை தேர்ந்தேடுக்கும் முதல் இரகசிய வாக்கெடுப்பு தோல்வி

புதிய போப்பை தேர்ந்தேடுக்கும் முதல் இரகசிய வாக்கெடுப்பு தோல்வி

0

உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று (07) தொடங்கியது.

அதன்படி, நேற்று (07) வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்குப் பிறகு, 133 கர்தினால்கள் போப்பின் தேர்தல் நடைபெறும் தேவாலயத்திலேயே தங்கி தங்கள் ரகசிய வாக்களிப்புகளைச் செய்தனர்.

புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர்களின் வாக்கு வெளி உலகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் உலகத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கருப்பு புகை சமிஞ்சை

இன்று உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை வெளியேறியது.

அதன்படி, புதிய போப் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்ற கர்தினால்கள் யாரும் தேவையான 89 வாக்குகளைப் பெறவில்லை என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.  

NO COMMENTS

Exit mobile version