பாகிஸ்தானின் லாகூரில் பலத்த வெடிச்சத்தங்கள் மற்றும் சைரன்கள் கேட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் பாகிஸ்தான் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள வோல்டன் வீதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மூன்று குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அந்தபகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டுவெடிப்பு சத்தங்கள்
வெடிப்பின் தன்மை மற்றும் இடத்தை ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை லாகூர் வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இதனைத் தொடர்ந்து மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளார்.
