இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞரின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை அக்கரை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு பின்புறத்தில் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முகத்திலும் வாயிலும் செலோடேப் சுற்றிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நீலாங்கரை காவல்துறை
இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு – நீலாங்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சடலம் அருகே கிடந்த பையை சோதனை செய்ததில் அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசன் (வயது 33) என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
