கிரீஸில் இருந்து ஜெர்மனி சென்ற போயிங் 757 விமானத்தில் நடுவானில் தீப்பற்றியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த 16ம் திகதி கிரீஸ் நாட்டின் கோர்புவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் போயிங் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியது.
அவசரமாக தரையிறக்கம்
அந்த விமானத்தில் 273 பயணிகளும் மற்றும் 8 பணியாளர்களும் இருந்தனர். அந்த விமானம் அப்போது டஸ்ஸல்டார்ப் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்த நிலையில், இத்தாலியின் பிரிண்டிசி நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
