Home உலகம் இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் அன்று நடந்த ‘அதிசயம்’

இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் அன்று நடந்த ‘அதிசயம்’

0

 சுமார் 30 தசாப்தங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின்(england) கிரெடிடன் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான கதைப் புத்தகம் கடந்த கிறிஸ்மஸ் அன்று நூலகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

புத்தகம் மீண்டும் தபாலில் வந்தது. யாரால் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. நூலக அதிகாரிகள் புத்தகத்தை சரிபார்த்தபோது, ​​கிரெடிடன் நூலகத்தில் இருந்து 31 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

30 தசாப்தங்களுக்கு பின்னர் கிடைத்த புத்தகம்

புத்தகம் குறித்து, நூலக அதிகாரிகள் தங்கள் முகநூல் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த புத்தகத்தின் புகைப்படம் மற்றும் நூலகத்திலிருந்து புத்தகம் எடுக்கப்பட்டமை தொடர்பான அட்டையும் பகிரங்கப்படுத்தப்பட்டது.

‘எங்கள் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புத்தகம் திரும்பக் கிடைத்தது. புத்தகத்தை யார் எடுத்தார்கள், யார் அதை எங்களிடம் கொண்டு வந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.

 எப்போது எடுக்கப்பட்டது

திகதி முடிந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகுதான் புத்தகம் திருப்பிக் கொடுக்கப்பட்டது என்று சொல்ல விரும்புகிறோம்.’ இவ்வாறு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்கள்.

நூலக அட்டையின் படி, ‘தோமஸ் ஏபிசி’ என்ற இந்த குழந்தைகளுக்கான கதை புத்தகம் மார்ச் 25, 1993 இல் எடுக்கப்பட்டது. கிறிஸ்மஸ் தினத்தன்று புத்தகம் கிடைத்ததால், கிறிஸ்மஸ் அன்று நடந்த ‘அதிசயம்’ என்று கருதுவதாக நூலக அதிகாரிகள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version