Home இலங்கை குற்றம் காதலியை கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்த காதலன்: நடந்தது என்ன..!

காதலியை கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்த காதலன்: நடந்தது என்ன..!

0

புத்தளத்தல் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவில் உள்ள பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இந்தக் கொலை நடந்துள்ளது.


காதலி கொலை

வென்னப்புவ, பாடசாலை ஒன்றுக்கு அருகில் வசித்து வந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளம் பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயது சந்தேக நபருடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்துள்ளார்.

எனினும் காதலை முறித்து உறவை முடிவுக்கு கொண்டு வருவதாக, காதலி தெரிவித்தமையினால் ஆத்திரமடைந்த இளைஞன் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காதல் முறிவு

காதலுக்காக காதலியின் வீட்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

NO COMMENTS

Exit mobile version