Home இலங்கை குற்றம் 22 வயது யுவதிக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த காதலன் கைது

22 வயது யுவதிக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த காதலன் கைது

0

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகக்கூறி காதலியிடம் பணம் பெற்ற காதலனை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதினொரு மாதங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் தற்செயலாக சந்தித்த நுவரெலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞனுடன் உறவுகொண்ட வேவெல்லத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.

காதலரின் வேண்டுகோளுக்கு இணங்க படங்களை எடுத்து காதலனின் கைபேசிக்கு அனுப்பியதாகவும், காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் தான் அவ்வாறு செய்ததாகவும் பொலிஸில் ஒப்புக்கொண்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நுவரெலியாவினை சேர்ந்த காதலன் இரத்தினபுரிக்கு வந்து காதலியை பல தடவைகள் சந்தித்ததாகவும், திருமணத்தின் பின்னர் நுவரெலியாவில் வீடு ஒன்றை நிர்மாணிக்க விரும்புவதாகவும், அதற்கு 100,000 ரூபா தேவைப்படுவதாகவும் யுவதியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி ஒரு இலட்சம் ரூபாவை காதலனுக்கு வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் பணம் கேட்டு யுவதியின் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், 20 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/boyfriend-arrested-for-blackmailing-girlfriend-1730465442

NO COMMENTS

Exit mobile version