Home உலகம் பங்களாதேஷில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: முகமது யூனுஸ்

பங்களாதேஷில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: முகமது யூனுஸ்

0

பங்களாதேஷில் (Bangladesh) வாழும் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டு பேசிய போது அவர் இதனைத் தெரிவித்ததாக இந்தியப் (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள்

கடந்த சில நாட்களாக பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டதுடன், பங்களாதேஷில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன் பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டன பேரணி ஒன்றும் அண்மையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version