Home உலகம் பிரேசில் செல்லும் கனேடியர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு

பிரேசில் செல்லும் கனேடியர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு

0

எதிர்வரும் வரும் ஏப்ரல் பத்தாம் திகதி முதல், கனடியர்கள் பிரேசிலுக்கு (Brazil) செல்ல வீசா கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை 90 நாட்கள் வரை சுற்றுலா மற்றும் வணிக நோக்கத்தில் வீசா இன்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இப்போது சுற்றுலா பயணிகளுக்கு வீசா தேவைப்படும் என பிரேசில் அரசு அறிவித்துள்ளது.

மாணவர் வீசா

இதன்படி, வணிக மற்றும் மாணவர் வீசாவுக்கு 90 நாட்கள் வரை வீசா தேவையில்லை என அறிவித்துள்ளது.

இருப்பினும், 90 நாட்கள் தாண்டினால் பிரேசிலின் காவல் துறை (Federal Police) மூலம் அனுமதி பெற வேண்டும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் இந்த புதிய வீசா விதி பிரயோகிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

எனினும், ஏற்கனவே செல்லுபடியாகும் (valid) வீசா இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version