இந்தியா (India), சீனா (China), ரஷ்யா (Russia) உள்ளிட்ட நாடுகள் சேர்ந்துள்ள பிரிக்ஸ் அமைப்புக்குள் உள்ளக வர்த்தகம் ஒரு டிரில்லியனை கடந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்க (America) டொலருக்கு எதிரான ஒரு முதற்கட்ட வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்பட்ட நாடுகள்
இப்போது பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள இந்த அமைப்பின் மக்கள் தொகை மற்றும் உலக ஜிடிபியில் பங்களிப்பு 40 வீதமாகவுள்ளது.
இந்நதிலையில், பிரிக்ஸ் நாடுகள் எதிர்காலத்தில் அணுசக்தி, ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் பெரும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன என்றும், உறவுகளை வலுப்படுத்தி, சமத்துவம் மற்றும் ஒற்றுமையை கடைபிடிக்கவுள்ளதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள் தங்களது சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளதை அமெரிக்கா கவலையுடன் கவனிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடி வர்த்தகம்
இந்தநிலையில், இந்த நாணய மாற்றமின்றி நேரடி வர்த்தகம் மூலம் வங்கி கட்டணச் செலவுகள் குறையும் மற்றும் இலாபம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ரூபாய் போன்ற உள்ளூர் நாணயங்களின் பொருள் மதிப்பு உயரும் எனவும் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் டொலரின் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
BRICS வர்த்தகம் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை குறைத்து, இந்தியாவுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
