Home உலகம் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

0

பிரித்தானிய (United Kingdom) மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சார்லஸ் மன்னர் நேற்றைய தினம் (27.03.2025) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace) தெரிவித்துள்ளது.

மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து நேற்று மற்றும் இன்றைய தினம் (28.03.2025) அவரது பொது நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானிய மன்னர்

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தனக்கு ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் அறிவித்ததிலிருந்து, மன்னரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

76 வயதான சார்ள்ஸ், சுமார் மூன்று மாதங்கள் பொதுப் பணிகளில் இருந்து விலகி இருந்தார், ஆனால் அரசாங்க ஆவணங்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் பிரதமரைச் சந்தித்தல் போன்ற அரசுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இந்நிலையில், மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னரும் பிரித்தானிய முடியாட்சியின் மீது சார்ள்ஸின் புற்றுநோய் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version