Home உலகம் இஸ்ரேல் – ஈரான் மோதலில் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடரின் திகிலூட்டும் கணிப்பு

இஸ்ரேல் – ஈரான் மோதலில் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடரின் திகிலூட்டும் கணிப்பு

0

பிரித்தானிய ஜோதிடர் கிரேக் ஹாமில்டன்-பார்க்கர்(Craig Hamilton-Parker), இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலில் இன்னும் 9 நாடுகள் இணையும் என்று மீண்டும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் அவர் ஈரானுக்கு இஸ்ரேலின் பதிலடி உறுதி எனவும் கணித்திருத்திருந்தார்.

புதிய நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் இவர் இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் தொடர்பில் புதிய காணொளி ஒன்றை பதிவி செய்துள்ளார்.

ஈரானிய அதிபரின் வருகை: சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை

முதலாவதாக ரஷ்யா

அதன்படி, அவர் இந்த போர் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும், இதுவரை தொடர்பில்லாத நான்கு நாடுகள் இந்த மோதலில் களமிறங்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

அதில் முதலாவதாக  ரஷ்யா களமிறங்கும் என்றும், ஏற்கனவே ரஷ்யா இந்த விவகாரத்தில் தலையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு

மேலும், இரண்டாவதாக வட கொரியாவும் இஸ்ரேல் – ஈரான் மோதலில் ஒரு தரப்பிற்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சீனா மற்றும் ஜேர்மனியும் களமிறங்கும் என்றும், சவுதி அரேபியா துருக்கியும், எகிப்தும் ஜோர்தானும் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ராக்கெட்டுகளை பாதுகாக்கும் உலோகம்! இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version