Home உலகம் கனேடிய வான்வெளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரித்தானிய விமானம்

கனேடிய வான்வெளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரித்தானிய விமானம்

0

அமெரிக்கா (America) நோக்கி பயணித்த பிரித்தானிய (British) விமானமொன்று 9 மணி நேர பயணத்திற்கு பிறகு புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் இருந்து டெக்சாஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த Boeing-ன் 787-9 Dreamliner என்ற விமானமே இவ்வாறு திரும்பியனுப்பப்பட்டுள்ளது.

விமானமானது, கனேடிய வான்வெளியை அடைந்த போது, தொழிநுட்ப கோளாறுகளை எதிர் கொண்டுள்ளது.

பழுதுபார்க்கும் வசதி

அதனை தொடர்ந்து, பழுதுபார்க்கும் வசதி லண்டனில் உள்ள நிறுவனத்தின் மட்டுமே உள்ளதால் மீண்டும் விமானம் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தின் போது விமானத்தில், 300 பயணிகள் இருந்துள்ளதுடன் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளதுடன் அனைத்து பயணிகளையும் டெக்சாஸ் செல்லும் மற்றொரு விமானத்திற்கு மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.      

NO COMMENTS

Exit mobile version